×

வீடுதோறும் தேசிய கொடி ஏற்ற வேண்டும்

திருப்பூர், ஜூலை 28: தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் பூஜாரிகள் மற்றும் பூ கட்டுவோர் பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அனுப்பர்பாளையத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் திருச்செல்வம் தலைமை வகித்தார். செயலாளர் சிவா முன்னிலை வகித்தார். மாவட்ட துணை அமைப்பாளர் வெள்ளமுத்து, வரவேற்றார். மாநில இணை பொது செயலாளர் விஜயகுமார், கோட்ட அமைப்பாளர் குமரவேல், ஆகியோர் பேசினர்.

 கூட்டத்தில், ஆகஸ்ட் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை நிர்வாகிகள் அனைவரும் தனது வீட்டின் முன் தேசியக்கொடி ஏற்ற வேண்டும். கோகுலாஷ்டமி விழாவையொட்டி குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்துவது. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருப்பூரில் 75 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் இளைஞர் அணி செயலாளர் செல்வம், மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிக்குமார், திருமுருகன் பூண்டி நகர தலைவர் ஜெயராம், நெருப்பெரிச்சல் பகுதி நிர்வாகி சிவகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags :
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...