×

6 திமுக எம்.பி.க்கள் சஸ்பெண்ட் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து திமுக தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

கோவை, ஜூலை 28: பாராளுமன்றத்தில் இருந்து 6 திமுக எம்.பி.க்கள் உள்பட 19 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து கோவை மாவட்ட திமுக தொழிற்சங்கம் (தொமுச) சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தொமுச கவுன்சில் செயலாளர் சிடிசி மணி தலைமை தாங்கினார். தொமுச கவுன்சில் துணை செயலாளர் தமிழ்செல்வன், தொமுச ரேஷன் ஊழியர் சங்க மாநில தலைவர் உமாகாந்தன், கட்டுமான தொழிற்சங்க நிர்வாகிகள் கிருஷ்ணசாமி, முருகேசன் மற்றும் ராக்கிமுத்து, வணங்காமுடி, பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், பங்கேற்ற தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், ஒன்றிய பாஜ அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், செந்தில்குமார், வக்கீல் வினோத், சரவணன், குமார், நிசார் அகமது, ஆட்டோ மணி, ஆட்டோ செல்வம், கற்குவேல், பாலசுப்பிரமணியன், காளிதாஸ், கார்த்திக், கருப்பசாமி, அர்ஜூன், நாகராஜ், ஆட்டோ செந்தில்குமார், கிருஷ்ணமூர்த்தி, காதர், ராஜ்குமார், பிரதாப், சமுத்திரபாண்டி, மாரிமத்து, முருகானந்தம், வீரகுமார், புலவேந்திரன், ரமேஷ், ராஜேஸ்குமார், வினோத்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Kasar M. GP ,djagam union ,baja government ,
× RELATED மக்களை பிளவுபடுத்தும் பாஜ விரைவில்...