கோவை நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர்கள் இடமாற்றம்

கோவை, ஜூலை 28: தமிழகத்தில் நெடுஞ்சாலை துறையில் பணியாற்றும் கோட்ட பொறியாளர்கள் 42 பேர் நிர்வாக காரணங்களுக்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், கோவை தேசிய கோட்டப்பொறியாளர் சமுத்திரகனி, கோவை திட்டங்கள் சிறப்பு கோட்டத்திற்கும், வேலூர் நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் கோட்டப்பொறியாளர் சுந்தரமூர்த்தி, கோவை கட்டுமானம் மற்றும் பராமரிப்புக்கும், தஞ்சை துணை கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ் கோவை தேசிய நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளராகவும், சென்னை மாநகர சாலைகள் கோட்டப்பொறியாளர் சரவணசெல்வம் பொள்ளாச்சி கட்டுமானம் மற்றும் பராமரிப்புக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், பொள்ளாச்சி கோட்டப்பொறியாளர் பரணிதரன் திண்டுக்கல் மாவட்டத்திற்கும், கோவை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு மாதேஸ்வரன் ஈரோட்டிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: