பனிமய மாதா பேராலய திருவிழாவில் வணிகர்கள், இளையோருக்கு சிறப்பு திருப்பலி

தூத்துக்குடி, ஜூலை 28: தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழாவில் 2ம் நாளான நேற்று வணிகர்கள், இளையோருக்கான சிறப்பு திருப்பலி நடந்தது. தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா, நேற்று முன்தினம் (26ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. 2ம்நாள் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 5 மணிக்கு முதல் திருப்பலி, 5.45 மணிக்கு 2ம் திருப்பலி நடந்தது. காலை 6.30 மணிக்கு காந்திநகர் பங்கு இறைமக்கள், 7.30 மணிக்கு லூர்தம்மாள்புரம் பங்கு இறைமக்கள், திரு இருதய அருட்சகோதரிகளுக்கான திருப்பலி நடந்தது. 8.30 மணிக்கு வெள்ளப்பட்டி மற்றும் தருவைகுளம் பங்குகளின் இறைமக்களுக்கான திருப்பலி, 9.30 மணிக்கு வணிகர்களுக்கான திருப்பலி, 11 மணிக்கு டிவைன்மெர்சி தியான இல்லத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட நகர ஜெபக்குழுக்களுக்கான திருப்பலி நடந்தது. மாலை 5.30 மணிக்கு இளையோருக்கான திருப்பலி நடந்தது. இதில் இளையோர் இயக்க பொறுப்பாளர் ரஞ்சித், மதுரை மார்ட்டின், சுரேஷ், சகாயம், பிரைட்டன், ஜேம்ஸ் விக்டர், சதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இத்திருப்பலிகளுக்கு ஆலய பங்குத்தந்தை குமார்ராஜா தலைமை வகித்தார். இரவு பங்குத்தந்தை ஆரோக்கியராஜ் மறையுரை ஆற்றினார். ஆக.5ம் தேதி நடைபெறும் சிகர நிகழ்ச்சியான பெருவிழாவில் இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி, பிஷப் ஸ்டீபன் தலைமையில் நடக்கிறது.

Related Stories: