திட்டக்குடியில் தேங்கி நின்ற மழைநீர் அகற்றம்

திட்டக்குடி, ஜூலை 28: திட்டக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட கோழியூர் 8வது வார்டில் உள்ள ஆதிதிராவிடர் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு பெய்த பலத்த மழையால் தண்ணீர் தேங்கி நின்றது. இதையடுத்து திட்டக்குடி நகராட்சி சார்பில் பொக்லைன் இயந்திரம் மூலம் தேங்கியுள்ள மழை நீர் வெளியேற்றப்பட்டது. மேலும் தண்ணீர் வெளியேறும் வகையில் வழிவகை செய்யப்பட்டது. திட்டக்குடி நகர் மன்ற தலைவர் வெண்ணிலா கோதண்டம், துணை தலைவர் பரமகுரு, 8வது வார்டு கவுன்சிலர் செமிளாதேவி, பணி மேற்பார்வையாளர் ரமேஷ், டெக்னீசியன் அஜித்குமார், திடக்கழிவு பரப்புரையாளர்கள் சிவா, சுரேஷ், உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Related Stories: