×

பக்கிள் ஓடை சீரமைப்பு பணி மேயர் ஜெகன்பெரியசாமி பார்வையிட்டார்

தூத்துக்குடி, ஜூலை 27: தூத்துக்குடி பக்கிள் ஓடையில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாநகரின் மைய பகுதியில் கழிவு நீரை அகற்றும் பிரதான கழிவுநீர் ஓடையாக பக்கிள் ஓடை அமைந்துள்ளது. இதில் குப்பைகள் மற்றும் செடிகளால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்குவதாக அப்பகுதியினர் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மாநகராட்சி சார்பில் 3வது மைல் முதல் திரேஸ்புரம் வரை சுமார் 6 கிமீ வரை தேங்கியுள்ள கழிவுகளை அகற்றுவதன் மூலம் கழிவு நீரை விரைந்து அகற்ற திட்டமிடப்பட்டது. அதன்படி இந்த பணியை கடந்த 23ம் தேதி தொடங்கப்பட்டது. செல்வநாயகபுரம், கருத்தபாலம், ஆண்டாள்தெரு வழியாக திரேஸ்புரம் முகத்துவாரம் பகுதியில் கழிவுகளை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியை மேயர் ஜெகன்பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கிழக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், சுகாதார அலுவலர் ஹரிகணேஷ், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், திமுக பிரமுகர் ஜேஸ்பர் அற்புதராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Mayor ,Jaganperiyasamy ,Buckle ,
× RELATED ஈக்வடார் நாட்டின் மேயர் பிரிஜிட்...