மாரியம்மன் கோயிலில் கூழ் ஊற்றும் விழா

தர்மபுரி, ஜூலை 27: தர்மபுரி அன்னசாகரம் எரங்காட்டுக்கொட்டாய்  மாரியம்மன் கோயிலில் நேற்று கூழ் ஊற்றும் விழா நடந்தது. தர்மபுரி அன்னசாகரம் மற்றும் எரங்காட்டு கொட்டாய்  மாரியம்மன் கோயில் திருவிழா, கடந்த 24ம் தேதி கொடியேற்றம் மற்றும் சக்தி கரகம் அழைத்தலுடன் துவங்கியது. 25ம் தேதி செல்லியம்மன் பட்டாளம்மன் ஆகிய அம்மன்களுக்கு, துள்ளு மாவு மற்றும் பானகம் படைத்தல் நடந்தது. நேற்று மாரியம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, நூற்றுக்கணக்கான பெண்கள், தாரை தப்பட்டையுடன் எரங்காடு பகுதியில் இருந்து மாரியம்மன் கோயில் விநாயகர் கோயில் வீதி மற்றும் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று, அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு, அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் தர்மகர்த்தா மாரிமுத்து, கோயில் தர்மகர்த்தா வடிவேல் மற்றும்  பூக்கடை ரவி, நகராட்சி கவுன்சிலர் ராஜாத்தி ரவி, எரங்காட்டு வடிவேல் உள்ளிட்ட விழா குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories: