கோவை இளம்பெண் திருச்சியில் மாயம்

திருச்சி, ஜூலை 27: கோவையை சேர்ந்த இளம்பெண் திருச்சியில் திடீரென மாயமானார். மாயமான இளம்ெபண்ணை போலீசார் தேடுகின்றனர்.கோவை மாவட்டம், பில்லுபட்டி அய்யனாபுரம் பகுதியை சேர்ந்த சித்ரா மகள் அபிராமி (20). கோவையில் இருந்து தன்னுடைய சகோதரர் மற்றும் மாமாவுடன் பேருந்தில் திருச்சிக்கு வந்துள்ளார். திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு வந்து இறங்கியுள்ளனர். தொடர்ந்து, அபிராமி மட்டும் அருகில் உள்ள கழிவறைக்கு சென்று விட்டு வருவதாக கூறிச் சென்றவர் பின்னர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சகோதரர், மாமானார் பல்வேறு இடங்களில் தேடியும் அபிராமி கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின்பேரில், கண்டோன்மென்ட் போலீசார் வழக்குப்பதிந்து, மாயமான இளம்பெண்ணை தேடுகின்றனர்.

Related Stories: