திருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி

திருவாரூர், ஜூலை 27: திருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி வருகின்ற ஆகஸ்ட் 1ம் தேதி முதல் துங்க உள்ளது என்று கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளர். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிறுப்பதாவது: திருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி வருகின்ற ஆகஸ்ட் 1ம் தேதி முதல் துங்கவுள்ளது. அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் தாமாக முன்வந்து தங்களது ஆதார் எண்ணை ERONET, GARUDA APP, NVSP, VHA என்ற இணையதளத்தின் மூலமாக 6 B படிவத்தை பூர்த்தி செய்து இணைக்கலாம். மேலும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுகளுக்கு நேரடியாக வரும் போது படிவம் 6 B யை பெற்று 12 இலக்க ஆதார் எண்ணை படிவத்தில் பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் திரும்ப கொடுக்க வேண்டும். வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டால் கள்ள வாக்குப்பதிவை குறைக்க இயலும். எனவே, திருவாரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்காளர்களும் தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க தாமாகவே முன்வந்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளர்.

Related Stories: