×

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் ஆடிப்பூர உற்சவ தேரோட்டம்


திருவாரூர், ஜூலை 27: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் ஆடிப்பூர உற்சவ பெருவிழாவினையொட்டி கமலாம்பாள் தேரோட்டம் வரும் 31ம் தேதி நடக்கிறது. இதையொட்டி தேர் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜசுவாமி கோயில் சைவசமயத்தின் தலைமை பீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும், சமய குறவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் தலமாகவும் இருந்து வருகிறது. மேலும் கோயில் 5 வேலி, குளம் 5 வேலி, ஓடை 5 வேலி என நிலப்பரப்பினை கொண்ட இக்கோயிலின் மூலவராக வன்மீகநாதரும், உற்சவராக தியாகராஜரும் இருந்து வரும் நிலையில் இக்கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. பங்குனி உத்திர பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இந்த ஆழித்தேரோட்டமும், அதன் பின்னர் தெப்ப திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். இதனையடுத்து அருள்மிகு கமலாம்பாள் ஆடிப்பூர உற்சவ பெருவிழா ஆண்டுதோறும் கொடியேற்றதுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டிற்கான இந்த விழா கடந்த 23ம் தேதி இரவு கொடியேற்றதுடன் துவங்கியது. இதனையொட்டி இந்த கமலாம்பாள் சன்னதியின் எதிரே இருந்து வரும் கொடிமரத்திற்கு சிவாச்சாரியார்கள் மூலம் சிறப்பு பூஜைகள் நடைபெற்று கொடியேற்றம் நடைபெற்றது. 24ம் தேதி இரவு முதல் அருள்மிகு கமலாம்பாள் வீதியுலா காட்சியானது துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த விழாவின் நிறைவாக கமலாம்பாள் தேரோட்டம் வரும் 31ம் தேதி மாலை நடைபெறும் நிலையில் இந்த தேர் கட்டுமான பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Tags : Tiruvarur Thyagaraja Swamy Temple ,
× RELATED திருவாரூர் தியாகராஜர் சுவாமி...