×

தஞ்சாவூரில் கொட்டிதீர்த்த மழை அதிகபட்சமாக கீழ்அணைக்கட்டில் 130 மி.மீ. பதிவு

தஞ்சாவூர், ஜூலை 27: தஞ்சாவூரில் நேற்று கன மழை கொட்டித் தீர்த்தது. இதில் அதிகபட்சமாக கீழ் அணைக்கட்டில் 130.60 மி.மீட்டர் பதிவானது. தமிழகத்தில் கிழடுக்கு சுழற்சி காரணமாக ஒரு சில பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இரவு நேரங்களில் மழை பெய்கிறது. தஞ்சை, திருச்சி, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், கரூர், சிவகங்கை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து கொண்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 25ம் தேதி இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. தஞ்சை, மாரியம்மன் கோவில், அம்மாபேட்டை, சாலியமங்கலம், ஒரத்தநாடு, கண்டியூர், திருவையாறு, வல்லம், போன்ற பகுதியில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக கீழ்அணைக்கட்டில்-130.60 மீ.மி மழையும், குறைந்தபட்சமாக திருக்கட்டுப்பள்ளி பகுதியில் 1.20 மி.மீ, மழை பதிவாகியுள்ளது.

மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு: தஞ்சை தாலுகா தஞ்சை மாநகரில்-56, வல்லம் பகுதியில்-39, குருங்குளத்தில்-43.80, பூதலூர் தாலுகா பூதலூரில்-2.40, அணை கட்டில் 240, ஒரத்தநாடு தாலுகா ஒரத்தநாட்டில்-7.80, நெய்வாசலில்-4.60, வெட்டிக்காட்டில்-15.80, கும்பகோணத்தில்-24.20 மழை பெய்துள்ளது. பாபநாசம் தாலுகா பாபநாசத்தில்-20 மி.மீ, அய்யம்பேட்டையில்-18, திருவிடைமருதூர் தாலுகாவில்-53.40, பட்டுக்கோட்டை தாலுகா பட்டுக்கோட்டையில்-45, அதிராம்பட்டினத்தில் 16.60, ஈசம்விடுதியில்-30, மதுக்கூரில்-10.20, பேராவூரணியி-28.00 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் 563 மி.மீ, மழையும் அதாவது சராசரியாக 26.81 செ.மீ, மழை பெய்துள்ளது என தஞ்சை மாவட்ட பேரிடர் மேலாண்மை கூறியுள்ளது.

Tags : Thanjavur ,
× RELATED தஞ்சாவூர் நாடாளுமன்ற தேர்தலில் 100%...