×

பெரம்பலூர் அருகே கீரிப்பிள்ளை, அணில்கள் வேட்டையாடிய 3 பேர் கைது

பெரம்பலூர்,ஜூலை27: பெரம்பலூர் அருகே ”இண்டியன் கிரே மங்கூஸ்” எனப் படும் கீரிப்பிள்ளை, அணில்களை வேட்டையாடிய 3 பேர்களை வனத்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர். பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுக்கா, சித்தளியில் இருந்து அசுர் செல்லும் சாலையில் சிலர் 3 மீ. நீளமுள்ள மூங்கிலால் ஆன குத்தூசியைக் கொண்டு வனவிலங்குகளை வேட்டையாடி விற்பனை செய்வதாக, பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் குகனேஷ் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மாவ ட்ட வன அலுவலர் குகனேஷ் உத்தரவின் பேரில், பெரம்பலூர் வனச்சரகர் பழனி குமரன் தலைமையில், பெரம்பலூர் பிரிவு வனவர் குமார், வனக்காப்பாளர்கள் (சிறுவாச்சூர் காவல்பகுதி) ரோஜா, (ரஞ்சன்குடி காவல் பகுதி) அன்பரசு ஆகியோர் குழுவாகச் சென்று சித்தளி பகுதியிலிருந்து செல்லும் அசூர் பிரிவு தார் சாலைக்கு அருகில் காலை 10 மணி அளவில் 3 மீட்டர் நீளமுள்ள குத்தூசியைக் கொண்டு, \”இந்தியன் கிரே மங்கூஸ்\” எனப்படும் வகையைச் சேர் ந்த கீரிப்பிள்ளை, அணில் ஆகியவற்றை வேட்டையாடி விற்பனை செய்ய முயன் று கொண்டிருந்த மூன்று நபர்களைக் கையும் களவுமாக பிடித்தனர்.அவர்களிடம் நடத்திய விசா ரணையில் பெரம்பலூர் மா வட்டம், குன்னம் தாலுக்கா, எழுமூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் ராமசா மி (22), ராமன் மகன் சாமி நாதன்(65), ராமன் மகன் ரா மலிங்கம்(70)ஆகியோர்என் பது தெரியவந்தது. உயிரினங் களைக் கைப்பற்றி மூவர் மீதும் வழக்குப்பதிவு செய் யப்பட்டது.இந்தகுற்றம் பிரி வு 51,52-ன் படி தண்டனை க்கு உரியதாகும் என்பதால் மூவரும் பெரம்பலூர் குற்ற வியல் நீதிமன்றத்தில் ஆஜ ர் படுத்தி சிறையில் அடை க்கப்பட்டனர். இதுகுறித்து மாவட்ட வனஅலுவலர் குகனேஷ் தெரிவிக்கையில், பெரம்பலூர் மாவட்டத்தில் வன விலங்குகளை வேட் டையாடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். அவ்வாறு வேட்டையாடுவோர் வன விலங்குகள் பாதுகாப்புச் ச ச்சட்டத்தின் படி கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என எச்சரித்துள்ளார்.

Tags : Keeripillai ,Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்...