×

தலைஞாயிறு பேரூராட்சியில் செஸ் ஒலிம்பியாட் தீபத்திற்கு கும்ப மரியாதை வரவேற்பு

வேதாரண்யம், ஜூலை. 27: சென்னை மாமல்ல புரத்தில் 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடை பெற உள்ளதையொட்டி நாட்டின் பல்வேறு மநிலங்களுங்களுக்கு சென்ற செஸ் ஒலிம்பியாட் தீபம் 25-ம் தேதி தமிழ்நாடு வந்தது.
நேற்று வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக ஸ்தூபியில் தொடங்கிய ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டம் தலைஞாயிறு வந்த போது, கண்கவர் வரவேற்பு அளிக்கப்பட்டது. பேரூராட்சிஅலுவலகம் அமைந்துள்ள சின்ன சாலை இரு பக்கங்களிலும் பள்ளி கல்லூரி மாணவிகள் நின்று செஸ் கொடி அசைத்து வரவேற்றனர். மகளிர் சுய உதவி குழுவினர் மலர் தூவி ஆரத்தி எடுத்தனர். மேலும் பூரண கும்பத்துடன் வரவேற்றனர். பள்ளி மாணவர்கள் பேண்ட் வாத்திய இசை முழங்க வரவேற்றனர். பின்பு பள்ளி மாணவர்கள் வரவேற்பு நடனம் நிகழ்த்தினர். 44 வது செஸ் ஒலிம்பியாட் சின்னம் போல் பேரூராட்சி பணியாளர் வேடம் அணிந்து வரவேற்றது காண்போரை கவர்ந்தது. தலைஞாயிறு பேரூராட்சி அலுவலகம் வந்த ஒலிம்பிக் ஜோதிக்கு செயல் அலுவலர் குகன் வரவேற்பு அளித்தனர்.பின்பு வானில் வெள்ளை பலூன்கள் பறக்க விடப் பட்டன. பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Kumbha ,Chess Olympiad ,Thalainai Municipality ,
× RELATED கும்பகோணம் கும்பேஸ்வரர்!!