×

கரூரில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பேரணி

கரூா் ஜூலை27: கரூரில் 44வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் மாதிரி ஜோதியை மாணவ மாணவியரிடம் வழங்கி அமைச்சர் செந்தில்பாலாஜி விழிப்புணர்வுப் பேரணியில் பங்கேற்றாா். 44வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டியை நாளை( 28ம் தேதி) சென்னை மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.இந்த போட்டி தொடர்பாக மாணவ மாணவியரிடம் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் மாதிரி ஜோதியினை கொண்டு செல்லும் விழிப்புணர்வு பேரணியில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஸ்கேட்டிங் வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

பேரணியை அமைச்சர் செந்தில்பாலாஜி கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு. கலெக்டர் பிரபு சங்கர், மேயர் கவிதா கணேசன், எம்எல்ஏக்கள் மாணிக்கம், சிவகாம சுந்தரி, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாதிரி ஜோதியினை வழங்கி மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் மாநகராட்சி அலுவலகம் முன்புறம் இருந்து பேரணியை துவக்கி வைத்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் மாணவ, மாணவிகளுடன் பேரணியில் கலந்து கொண்டார்.

இந்த பேரணியானது தலைமை தபால் நிலையம், ஜவகர் பஜார், தைலா கார்னர், வட்டாட்சியர் அலுவலகம், பேருந்து நிலைய ரவுண்டானா வழியாக சென்று திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் முடிவடைந்தது.
அதனை தொடர்ந்து திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற செஸ் போட்டியினை துவக்கி வைத்தார். மாவட்ட முழுவதும் நடைபெற்ற செஸ் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் பதக்கங்களை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் எஸ்பி கனகராஜ் ,பா அன்பரசன் ஆர் எஸ் ராஜா , வெங்கமேடு சக்திவேல், மாநகர பொறுப்பாளர்கள் கரூர் கணேசன் வழக்கில் சுப்பிரமணியன், ஒன்றியச் செயலாளர்கள் கந்தசாமி, ரகுநாதன், புகளூர் நகராட்சித் தலைவர் குணசேகரன் துணைத்தலைவர் பிரதாபன், தாந்தோணி மேற்கு ஒன்றிய செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கரன், தொழிலதிபர் கே வி ஆர் வெங்கடேஷ் , பொதுக்குழு உறுப்பினர்கள் சாலை ரமேஷ், விகேடி ராஜ்கண்ணு, மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஆண்டாள் பாலகுரு , தலைமை பொதுக்குழு உறுப்பினர் சாலை சுப்பிரமணி, கரூர் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் வளர்மதிசிதம்பரம் , மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தம்பி சுதாகர் இரும்புக்கடை மோகனசுந்தரம், ஆண்டான்கோவில் மேற்கு ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி,மகளிரணி அமைப்பாளர் கலாவதி சக்திவேல், மாமன்ற உறுப்பினர்கள் வசுமதி பிரபு, புல்லட் பூபதி, வளர்மதி சம்பத் குமார் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பேரணியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜி கைகுலுக்கி அவர்களை ஊக்கப்படுத்தினார்.

Tags : 44th ,International Chess Olympiad Awareness Rally ,Karur ,
× RELATED கரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் உலா வரும் கால்நடைகள்