சோனியா காந்திக்கு அமலாக்க துறை

கரூர், ஜூலை27: காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அமைதி வழியில் அறப்போராட்டம் நடைபெற்றது. அமலாக்கத்துறை சார்பில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுதும் காங்கிரஸ் கட்சி சார்பில் அறப் போராட்டம் நடைபெற்றது.கரூர் லைட்ஹவுஸ் கார்னர் அருகே நடைபெற்ற இந்த அறப்போராட்டத்துக்கு மாவட்ட பொருளாளர் மெய்ஞானமூர்த்தி தலைமை வகித்தார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்ரமணியன், மாநகராட்சி கமிஷனர் ஸ்டீபன்பாபு உட்பட அனைத்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.அறப் போராட்டம், அமலாக்கத்துறையின் செயல்பாடு கண்டிக்கும் வகையில் நடைபெற்றது.

Related Stories: