குளித்தலையில் அண்ணா,கருணாநிதி சிலைகள் அமைக்க தேர்வான இடம்

குளித்தலை, ஜூலை 27: தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி 1957ல் முதன் முதலில் நின்று வெற்றி பெற்ற தொகுதி குளித்தலை தொகுதி என்பதால் அதன் நினைவாக குளித்தலை நகரத்தில் அண்ணா ,கருணாநிதி சிலை அமைக்க கரூர் மாவட்ட திமுக மற்றும் குளித்தலை நகர திமுக சார்பில் முடிவு செய்யப்பட்டு அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. அதனை நேரில் ஆய்வு செய்வதற்காக நேற்று திருச்சியில் இருந்து கரூர் செல்வதற்காக புறவழி சாலை வழியாக தமிழக மின்சாரத்துறை மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி காரில் வந்தார் அப்போது அவருக்கு பெரிய பாலம் பரிசல்துறை சாலையில் எம்எல்ஏக்கள் மாணிக்கம், சிவகாமசுந்தரி மற்றும் மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் பல்லவி ராஜா, நகர் மன்ற தலைவர் சகுந்தலா. நகர அவைத் தலைவர் சாகுல் ஹமீது மாவட்ட பிரதிநிதிகள் ஜாபருல்லா மெடிக்கல் மாணிக்கம் நகர்மன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் வரவேற்றனர். இதனை தொடர்ந்து குளித்தலை நகரத்தில் அண்ணா, கருணாநிதி சிலைகள் வைக்க தேர்வு செய்யப்பட்டு இருக்கும் இடத்தை நேரில் ஆய்வு செய்தார்.

Related Stories: