×

சிவகாசியில் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள பாலித்தீன் பைகள் பறிமுதல்

சிவகாசி, ஜூலை 27: சிவகாசி மாநகராட்சியில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பாலிதீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. சிவகாசி மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் டீ கப், தட்டு, பாலிதீன் ைப, கேரி பேக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சுகாதார பணியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பாலிதீன் பைகள் கைப்பற்றப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.  இதன் பின்னரும் சிவகாசி பகுதியில் பாலிதீன் பைகள், கேரி பேக்குகள் பயன்பாடு அதிகளவில் இருப்பது தெரியவந்தது. நேற்று சுகாதார அலுவலர் (பொ) முகம்மது சித்திக், சுகாதார ஆய்வாளர்கள் பாண்டியராஜன், முத்துப்பாண்டி மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் சிவகாசி பகுதியில் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது சிவகாசி முணங்கி நாடார் தெருவில் கண்ணன் என்பருக்கு ெசாந்தமான குடோனில் பதுக்கி வைக்க பட்டிருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான பாலிதீன் பைகள் மற்றும் பொருட்களை அதிகாரிகள்  பறிமுதல் செய்து ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

இதே ேபால் விஸ்வநத்தம் ேராட்டில் சிவக்குமார் என்பருக்கு சொந்தமான குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பாலித்தீன் பைகளை அதிகாரிகள்  பறிமுதல் செய்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். இவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள பாலிதீன் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சிவகாசி மாநகர் பகுதியில் பாலிதீன் பைகள், கேரி ேபக்குகள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்க படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Tags : Sivakasi ,
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து