ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சிசத்தியாகிரகம்

தேனி, ஜூலை 27: தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் ஒன்றிய பாஜ அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாக்கிரக போராட்டம் நடந்தது. தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாக்கிரக போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கூடலூர்.முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் அப்பு என்ற பாலசுப்பிரமணியன், மாவட்ட துணைத் தலைவர் சன்னாசி, தேனி யூனியன் துணை சேர்மன் முருகன் முன்னிலை வகித்தனர். பழனிசெட்டிபட்டி பேரூர் செயலாளர் அனந்தநாராயணன் வரவேற்றார்.  

போராட்டத்தின்போது, பாஜ தலைமையில் ஆளும் ஒன்றிய அரசு காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி மீது அமலக்கத் துறை மூலம் அச்சுறுத்துவதை கண்டித்து பேசினர். போராட்டத்தில், மாவட்ட மகளிரணி தலைவி கிருஷ்ணவேணி, நகர தலைவர்கள் தேனி முனியாண்டி, போடி முசாக்மந்திரி, கம்பம் போஸ், கூடலூர் ஜெயபிரகாஷ், வட்டார தலைவர்கள் போடி சுதாகர், சின்னமனூர் ஜீவா, பெரியகுளம் டாக்டர் அம்சாமுகமது, மாவட்ட செயலாளர் அபுதாகிர், பெரியகுளம் நகர பொருளாளர் கடல்பிரபு, தேனி நகராட்சி கவுன்சிலர்கள் சுப்புலட்சுமி, நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: