வயிரவன்பட்டி கோயிலில் வெள்ளி ரத புறப்பாடு

திருப்புத்தூர், ஜூலை 27: திருப்புத்தூர் அருகேயுள்ள நகர வயிரவன்பட்டி வயிரவர் சுவாமி பிரமோற்சவ விழாவில் நேற்று வெள்ளி ரத்தத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. திருப்புத்தூர் அருகே நகர வயிரவன்பட்டி வளரொளி விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசாமி, வடிவுடையம்மை சமேத வளரொளிநாதர் திருக்கோயிலில் கடந்த ஜூலை 23ல் வயரவ சுவாமி பிரமோற்சவத் திருவிழா காப்புக்கட்டுதலுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. 4ம் திருநாளான நேற்று காலை கோயில் மண்டபத்தில் வயிரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வெள்ளி அலங்காரத்தில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் யாகசாலை மண்டபத்தில் தீபாராதனை நடைபெற்று வயிரவர் வெள்ளிரதத்திற்கு எழுந்தருளினார். தொடர்ந்து உற்சவர் வெள்ளி ரதத்தில் புறப்பாடாகி திருக்கோயிலை சுற்றி வலம் வந்தார். இரவு 8 மணிக்கு கைலாச வாகனத்தில் உற்சவர் திருவீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து 5ம் திருநாளான இன்று ஜூலை 27ல் தேர் முகூர்த்தக்கால் நடும் வைபவம் காலை 7 மணிக்கு நடைபெற உள்ளது. ஜூலை.31ல் தேர்த்திருவிழா நடைபெற உள்ளது.

Related Stories: