×

நடுரோட்டில் தீக்குளித்து லோடுமேன் பலி

ராமநாதபுரம், ஜூலை 27: ராமநாதபுரத்தில் லோடுமேன் உடலில் பெட்ரோல் ஊற்றி நடுரோட்டில் தீக்குளித்து பலியானார். ராமநாதபுரம் தங்கப்பா நகரைச் சேர்ந்தவர் ரவி(50). இவரது முதல் மனைவி இறந்து விட்டார். வேணி என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அரண்மனை பஜார் பகுதியில் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். உடல் நல பாதிப்பால் அவதியடைந்து வந்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடித்து வீடு திரும்பினார். ஆனாலும், உடல் பாதிப்புகள் குறையவில்லை. இந்நிலையில், ராமநாதபுரம் நகைக்கடை பஜாரில் நேற்று காலை அமர்ந்த நிலையில் தன் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து இறந்தார். பஜார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Loduman ,
× RELATED லோடுமேன் வீட்டில் ₹3.70 லட்சம் பறிமுதல்: பறக்கும்படை அதிகாரிகள் அதிரடி