கோயில் செயல் அலுவலர் பணிக்காக 3 பேரின் பெயர்கள் மதுரை ஆதீனத்திற்கு பரிந்துரை ஐகோர்ட் கிளையில் அறநிலையத்துறை தகவல்

மதுரை, ஜூலை 27: கோயில் செயல் அலுவலர் பணிக்காக 3 பேரின் பெயர்கள் மதுரை ஆதீனத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட் கிளையில் அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை ஆதீனத்திற்கு சொந்தமாக தஞ்சை மாவட்டம் கஞ்சனூரில் அக்னீஸ்வரஸ்வாமி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு செயல் அலுவலரை நியமித்து அறநிலையத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து மதுரை ஆதீனத்தின் சார்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்யப்பட்டது.

இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது அறநிலையத்துறை நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு சிறப்பு பிளீடர் லிங்கதுரை ஆஜராகி, விதிப்படி 3 பேரை தேர்வு செய்து ஆதீனத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவர் தேர்வு செய்து கொடுக்கும் நபர் அறநிலையத்துறையால் நியமிக்கப்படுவார். ஆதீனத்தின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என்றார்.  இதையடுத்து மனுவின் மீது உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறிய நீதிபதி விசாரணையை ஆக.5க்கு தள்ளி வைத்தார்.

Related Stories: