×

மதுரையில் அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டம்

மதுரை, ஜூலை 27: மதுரை கலெக்டர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. சங்கத்தின் மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை வகிக்க, மாவட்ட துணை தலைவர்  சந்திரபாண்டி வரவேற்றார். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில  தலைவர் முருகையன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நீதிராஜா உள்ளிட்டோர்  பேசினர். ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் அரசு ஊழியர்களின் சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள் ஊர்ப்புற நூலகர்கள், எம்.ஆர்.பி செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். அகவிலைப்படி 3 சதவீதத்தை உடனே வழங்க வேண்டும். அரசு பணிகளில் உள்ள காலிப்பணியிடத்தை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிலுவை கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி ேகாஷமிட்டனர். இதில் அரசு ஊழியர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோரிக்கை தொடர்பான மனுவை சங்க நிர்வாகிகள் கலெக்டர் அனீஷ்சேகரிடம் வழங்கினர்.

Tags : Dharna ,Madurai ,
× RELATED எஸ்ஐ கர்ப்பமாக்கியதாக பெண் போலீஸ் தர்ணா