×

காரைக்குடியில் சூரியன் எப்.எம் சார்பில் பட்டிமன்றம்

காரைக்குடி, ஜூலை 27: மதுரையின் முதல் தர வானொலியான சூரியன் எப்.எம் மக்கள் மனம் கவரும் வகையில் பாடல்களையும், நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக காரைக்குடியில் சாலமன் பாப்பையாவின் மாபெரும் நகைச்சுவை பட்டிமன்றம் நடத்தப்பட்டது. பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் பேச்சாளர் ராஜா உள்பட சிறந்த பட்டிமன்ற பேச்சாளர்கள் கலந்து கொண்ட சிரிக்க, சிந்திக்க வைத்த இப்பட்டிமன்றத்தில் நிதி நிர்வாகத்தில் சிறந்தவர்கள் ஆண்களே, பெண்களே என்ற தலைப்பில் விவாதம் நடத்தப்பட்டது.

அனுமதிச்சீட்டு பெற்ற பார்வையாளர்கள் பிற்பகலில் இருந்தே ஆர்வத்துடன் அரங்கிற்கு வந்தனர். பேராசிரியர் சாலமன் பாப்பையா உள்பட பேச்சாளர்களின் பல்வேறு கருத்துக்களை பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து ரசித்து கேட்டனர். இன்றைய சூழ்நிலையில் நிதி நிர்வாகத்தை மேற்கொள்ள ஆண்களும்,பெண்களும் எந்த அளவுக்கு சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது என்பதை சிந்திக்க வைத்ததுடன், சிரிக்கவும் வைத்தது பேச்சாளர்களின் விவாதங்கள். சூரியன் எப்.எம் வழங்கிய பட்டிமன்றத்தை காரைக்குடி கவிதா நர்சிங்க ஹோம் மற்றும் கருத்தரித்தல் மையம் வழங்க, மதுரை அனுஜ் டைல்ஸ் உடன் வழங்க, கோபால் டூத் பேஸ்ட் மற்றும் அஞ்சால் அலுப்பு மருந்து ஆகிய நிறுவனத்தார் இணைந்து வழங்கினர்.

ஊடகத் தோழமையுடன் தினகரன் நாளிதழ் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது. கவிதா நர்சிங் ஹோம் மற்றும் கருத்தரித்தல் மைய இயக்குநர்கள் டாக்டர் ரமேஷ், டாக்டர் கவிதா ரமேஷ் உள்பட பலர் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர். விழாவில் சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, நகர்மன்ற தலைவர் முத்துத்துரை உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Karaikudi ,Suryan FM ,
× RELATED அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக டவுன்...