×

மார்பக புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிய மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் இந்தியாவின் முதல் `மம்மி பெட் ஸ்கேன்’ ஐகோர்ட் தலைமை நீதிபதி துவக்கி வைத்தார்

மதுரை, ஜூலை 27: பெண்களை பாதிக்கும் புற்றுநோய்களுள் மார்பக புற்றுநோய் தற்போது அதிகளவில் பரவி வருகிறது. இந்த நோய் மிகவும் தாமதமாக கண்டறியப்படுகிறது. இதனால் நோய் பாதிப்பு அதிகரித்து உயிரிழப்பின் சதவீதமும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மார்பாக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து தரமான உரிய சிகிச்சை அளிக்கும் வகையில் நவீன பெட் ஸ்கேன் உருவாக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்கள் பெட் ஸ்கேனால் கண்டறிய முடியும். ஆனால் தற்போது மருத்துவமனைகள் மற்றும் ஸ்கேன் மையங்களில், முழு உடல் பரிசோதனைக்கான பெட் ஸ்கேன் மட்டுமே உள்ளது.

இந்த ஸ்கேனால் புற்றுநோய் முற்றிய நிலையிலேயே கண்டறிய முடியும் ஆனால், தற்போது, மார்பக புற்றுநோயை கண்டறிவதற்காக பிரத்யேகமாக தாயாரிக்கப்பட்ட `மம்மி’ என்ற அதிநவீன பெட் ஸ்கேனால், ஒருவருக்கு 2 மி.மீ. அளவுள்ள கட்டி உருவாவதை முன்னரே கண்டறிய முடியும். இப்படி ஆரம்ப நிலையிலேயே புற்றுநோய் கண்டறியப்படுவதால் உரிய சிகிச்சையை விரைவாக மேற்கொண்டு உயிரிழப்பை தவிர்க்க முடியும். மேலும், மார்பகத்தை அகற்றுதல் உள்ளிட்ட துணை சிகிச்சைகளும் தேவையில்லாத நிலை ஏற்படும்.

நோயாளிகளுக்கு கிடைக்கும் சிகிச்சையின் பலனையும் `மம்மி பெட் ஸ்கேன்’ மூலம் தெரிந்துகொள்ள முடியும். மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள இந்த `மம்மி பெட் ஸ்கேன்’ செயல்பாட்டை, தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் முன்னிலையில், மதுரை ஐகோர்ட் கிளையின் தமைமை நீதிபதி முனீஷ்வர நாத் பண்டாரி நேற்று துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் எஸ்.குருசங்கர் மற்றும் காமினி குருசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : India ,``Mummy Bed Scan'' ,Chief Justice ,ICourt ,Madurai ,Meenakshi Mission Hospital ,
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...