×

அடுத்தடுத்து 2 இடங்களில் சுற்றுலா வேன், லாரி கவிழ்ந்து விபத்து

வேடசந்தூர், ஜூலை 27:  வேடசந்தூர் அருகே அடுத்தடுத்த இரண்டு இடங்களில் வேன், லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இருந்து மதுரைக்கு ஒரு லாரியில் முட்டைக்கோஸ் லோடு ஏற்றிக்கொண்டு மகாலிங்கம் என்பவர் ஓட்டிச் சென்றார். வேடசந்தூர் அருகே கரூர் மாவட்ட எல்லையான கணவாய் என்ற இடத்தில் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது.

இதில் முட்டைக்கோஸ் மூட்டைகள் லாரியிலிருந்து சிதறி கீழே விழுந்தன. லாரி டிரைவர் மகாலிங்கம் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இது குறித்து லாரி டிரைவர் மகாலிங்கம் கூறியபோது, திடீரென லாரியின் ஸ்டேரிங் லாக் ஆனதால் பிரேக் பிடிக்க முடியவில்லை, லாரியை கட்டுப்படுத்த முடியாததால் சாலையோரம் கவிழ்ந்ததாக தெரிவித்தார். இந்த விபத்து குறித்து கூப்பர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

 இதேபோல், தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்தவர் வீரக்குமார்(32). இவர் சுற்றுலாவாகனத்தில் 30க்கும் மேற்பட்டோருடன் சென்றார். வேடசந்தூர் அடுத்துள்ள நாகம்பட்டி பிரிவில் தேசிய நான்குவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது வேன் டயர் வெடித்து சாலையின் மையப் பகுதியில் கவிழ்ந்தது. இதில் வேனில் வந்த 14 பேர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags :
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...