திருப்பூர் மாவட்டத்தில் டி.எஸ்.பிக்கள் இடமாற்றம்

திருப்பூர், ஜூலை 27: திருப்பூர் மாவட்டத்தில் டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் . அதன்படி காங்கேயம் டிஎஸ்பி.யாக இருந்த குமரேசன் மாற்றப்பட்டு அதற்கு பதிலாக சிவகங்கை மாவட்டத்தில் டி.எஸ்.பி.யாக பணியாற்றிய பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் பல்லடம் டி.எஸ்.பி வெற்றிச்செல்வன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ராமநாதபுரத்தில் பணியாற்றிய சவுமியா நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் திருப்பூர் மாவட்டத்தில் பயிற்சி டி.எஸ்.பி.யாக இருந்த ராகவி புதுக்கோட்டை மாவட்டத்திற்கும், மாயவன் தூத்துக்குடி மாவட்டத்திற்கும், பிரபு ராணிப்பேட்டை மாவட்டத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: