×

பொட்டல பொருட்கள் விதிகளை பின்பற்றாவிட்டால் நடவடிக்கை: தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரிக்கை

திருப்பூர், ஜூலை 27:  திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையர் மலர்கொடி கூறியுள்ளதாவது:
சட்டமுறை எடையளவுகள் (பொட்டலப் பொருட்கள்) விதிகள் 2011-ன் கீழ் இறக்குமதி செய்யப்படும் சிகரெட் லைட்டர்கள் பொட்டலப் பொருட்கள் விதிகளை மீறியது தொடர்பாக சென்னை, தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந் அறிவுரைப்படி, தொழிலாளர் உதவி ஆய்வாளர்களுடன் இணைந்து, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிகரெட் லைட்டர்களில் சட்டமுறை எடையளவுகள் விதிகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து திருப்பூரில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.

 இதுதொடர்பாக 22 கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு 5 முரண்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளது. இது ெதாடர்பாக சம்மந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சட்டமுறை எடையளவு சட்டத்தின் படி (பொட்டலப் பொருட்கள் விதிகள்) ஒரு பொருள் விற்பனை செய்யப்படும்போது, பொட்டலத்தின் மேல் உறையில் இறக்குமதி செய்யப்பட்ட பொட்டலப் பொருளில், இறக்குமதியாளர், பொட்டலமிடுபவரின் முழு முகவரி, பொருளின் பொது பெயர், பொருளின் நிகர எடை, தயாரிப்பு தேதி ஆகியவை அச்சிடப்பட வேண்டும். மேற்படி விவரங்கள் அச்சிடப்படாமல் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Commissioner ,
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...