செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண திருப்பூர் மாவட்டத்திலிருந்து தேர்வான மாணவர்கள்

திருப்பூர், ஜூலை 27: திருப்பூர் மாவட்ட அளவிலான செஸ் போட்டி திருப்பூர் கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் நடந்தது.

இதில் வெற்றி பெற்றவர்கள் விபரம் வருமாறு:

14 வயது மாணவர்களில், அய்யம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் அபினேஷ், இடுவம்பாளையம் மேல்நிலைப்பள்ளி உதய கார்த்திபன், கே.வல்லகுண்டபுரம் நடுநிலைப்பள்ளி ரித்தீஷ். மாணவியரில், ஜெய்வாபாய் பள்ளி சவுமியாதேவி, பெருந்தொழுவு மேல்நிலைப்பள்ளி, நிவேந்திரா, ஜெய்வாபாய் பள்ளி ஸ்ரீதாரணி. மாணவர்களில், இடுவம்பாளையம் மேல்நிலைப்பள்ளி பத்ம பிரியன், விஜயாபுரம் மேல்நிலைப்பள்ளி மிதிலேஷ், மூலனுார் மேல்நிலைப்பள்ளி அகஸ்தன். மாணவியரில், குண்டடம் மேல்நிலைப்பள்ளி சுஜிதா, அபிநயா, வடுகப்பட்டி மேல்நிலைப்பள்ளி நவநீதா மூன்றாமிடம் பிடித்தனர். 19 வயது பிரிவுமாணவர்களில் சேவூர் மேல்நிலைப்பள்ளி அருண்பாண்டி, காங்கயம் மேல்நிலைப்பள்ளி சாய் சுஜித், கருவலுார் மேல்நிலைப்பள்ளி தீக்ஷித். மாணவியரில், உத்தமபாளையம் மேல்நிலைப்பள்ளி ரத்னா, கணக்கம்பாளையம் மேல்நிலைப்பள்ளி சந்தியா, பெருந்தொழுவு மேல்நிலைப்பள்ளி ரம்யா. வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை கலெக்டர் வினீத், அமைச்சர் சாமிநாதன், மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியன், மாநகராட்சி 4வது மண்டல தலைவர் பத்மநாபன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருவளர்செல்வி ஆகியோர் பாராட்டி பரிசளித்தனர்.

14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற வீரர்கள், வீராங்கனைகள் சென்னையில் நடைபெறும் 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் பார்வையாளர்களாகச் செல்ல உள்ளனர். இதில் 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் வருவாய் மாவட்ட அளவில் முதல் இடங்களைப் பெற்ற வீரர்கள், வீராங்கனைகள் மட்டும், சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று விளையாடவுள்ளனர்.

Related Stories: