ஆ.ராசா எம்பியிடம் திமுகவினர் கோரிக்கை கோவை புத்தக திருவிழா ‘நேரடி அறிவியல் செயல்முறை விளக்க காட்சி’

கோவை, ஜூலை 27:  கோவை கொடிசியாவில் கொடிசியா, தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து கோவை புத்தக திருவிழாவை 6வது ஆண்டாக நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவ மாணவியர்களுக்கான ‘நேரடி அறிவியல் செயல்முறை விளக்க காட்சி’யை கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் துவக்கி வைத்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

இதனைத்தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் எல்எம்எஸ்இ அகாடமி சார்பில் பள்ளிகளில் பயிலும்  1700 மாணவ, மாணவியர்களுக்கு நேரடி அறிவியல் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், ராக்கெட் எவ்வாறு செயல்படுகிறது, அதன் எடைக்கும் பறக்கின்ற வேகத்திற்கும் உள்ள தொடர்பு போன்ற அறிவியல் சம்மந்தமான பல்வேறு செயல்முறை விளக்கங்கள் குறித்து விளக்கப்பட்டன. இதன் மூலம், பலவகை அறிவியல் கருத்துகள் நேரடியாக செயல்முறையில் காணும் வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைத்தது. மேலும், இதில் கலந்துகொண்ட மாணவ மாணவியர்களுக்கு ஒரு அறிவியல் செயல் விளக்க கருவிகள் அடங்கிய பெட்டி வழங்கப்பட்டது.

Related Stories: