மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பேற்பு

கோவை, ஜூலை 27: தமிழகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் அதனை சார்ந்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்கள் 6 பேர் நிர்வாக காரணங்களுக்காக கடந்த வாரம் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி, கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த கீதா, கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த பூபதி நியமனம் செய்யப்பட்டார். இவர் தனது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். புதிய முதன்மை கல்வி அலுவலராக பொறுப்பேற்ற பூபதிக்கு கல்வித்துறை அலுவலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Related Stories: