×

வன எல்லையில் கல்குவாரி அமைக்க பொதுமக்களிடம் நாளை கருத்து கேட்பு கூட்டம்

கோபி, ஜூலை 27: கோபி அருகே டி.என்.பாளையத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பக வன பகுதி உள்ளது. இந்த வன எல்லை அருகே கவுண்டம்பாளையத்தில், சின்ன கொடிவேரியை சேர்ந்த ஒருவர் கல்குவாரி அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த கல்குவாரி அமைப்பது தொடர்பாக நாளை (28ம் தேதி) டி.என்.பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட நிர்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து சட்டவிரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சண்முகம் கூறுகையில்,``கடந்த 2018ம் ஆண்டிற்கு பிறகு தேசிய பசுமை தீர்ப்பாயம், கல்குவாரி அமைப்பதற்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை கொண்டு வந்துள்ளது. அதில், வன எல்லையில் இருந்து 1,000 மீட்டர் தூரத்திலும், குடியிருப்பு பகுதியில் இருந்து 300 மீட்டருக்கு அப்பாலும் தான் கல்குவாரி அமைக்க வேண்டும் எனவும், கல்குவாரி அமைப்பதற்கு கிராம மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் எனவும், அதில் 60 சதவீதம் எதிர்ப்பு இருந்தால் திட்டம் ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.ஆனால், கவுண்டம்பாளையத்தில் புதியதாக அமைக்கப்பட உள்ள கல்குவாரி வன எல்லையில் இருந்து 800 மீட்டர் தொலைவிலும், குடியிருப்பு பகுதியில் இருந்து 60 மீட்டர் தொலைவிலும் உள்ளது. இதனால் சட்டவிரோத கல்குவாரி அமைவதை தடை செய்ய வேண்டும்’’ என்றார்.

Tags : Kalguari ,
× RELATED கல்குவாரியில் வருமான வரித்துறை சோதனை