×

ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை

ஈரோடு, ஜூலை 27:  ஈரோட்டில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் குழுவினர் நேற்று அதிரடி சோதனை நடத்தி, விசாரணையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியில் ஒருவரது வீட்டில் நேற்று மாலை  என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக உள்ளே நுழைந்து அந்த வீட்டில் இருந்த 5 பேரிடம் திடீர் விசாரணை நடத்தினர். இதில் ஒருவரை மட்டும் வேறு இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வீட்டில் இருந்த தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்பட்டு ஸ்மார்ட் போன், லேப்டாப், டைரிகள், சிம்கார்டுகள், வங்கி பாஸ் புக் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றி விசாரித்தனர்.

ஈரோட்டில் என்ஐஏ விசாரணை நடப்பதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. பிரதமர் நரேந்திரமோடி உலக அளவில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைக்க தமிழகம் வர உள்ள நிலையில் என்ஐஏ குழுவினர் ஈரோட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘பெங்களூர் திலக் நகர் பகுதியில் அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த அக்தர் உசேன் லஸ்கர் என்பவரை கடந்த 24ம் தேதி கைது செய்து விசாரித்தனர். அவர் கொடுத்த தகவல் அடிப்படையில் சேலத்தில் பதுங்கி இருந்த அப்துல் அலி ஜூபா என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இவர் அளித்த தகவலின் அடிப்படையில் ஈரோடு மாணிக்கம் பாளையம் பகுதியில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்’’ என தெரிவித்தனர்.

Tags : NIA ,Manikampalayam ,Erode ,
× RELATED இருசக்கர வாகனம் மோதி டெய்லர் பலி