மகாலில் எடுத்த குறும்படத்தால் சர்ச்சை

மதுரை, ஜூன் 25: மதுரை திருமலை நாயக்கர் மகால், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. நகரின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும், இங்கு பல சினிமாக்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதனால் பழமையான மகால் பகுதிகள் சேதமடைவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

 இதை தொடர்ந்து, கோர்ட் உத்தரவில் 2011 முதல் சினிமா எடுக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஒரு குழுவினர், குறும்படம் ஒன்றை மகால் உட்பகுதியில் அனுமதியின்றி படமாக்கியுள்ளனர். இப்படத்தில் சண்டை காட்சியுடன், துப்பாக்கி பயன்படுத்தும் காட்சியும் இடம் பெற்றிருப்பதாக புகார் எழுந்துள்ளது. பார்வையாளர்கள் அதிகமுள்ள மகாலுக்குள் அனுமதியின்றி, மக்களை அச்சுறுத்தும் வகையில் இந்த படம் எடுக்கப்பட்டிருப்பதாக கூறி, இக்குறும்படத்தின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

Related Stories: