அழகுநாச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

உடுமலை, ஜூன் 25: மடத்துக்குளம் அருகே உள்ள காரத்தொழுவில் அழகுநாச்சியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. முன்னதாக அதிகாலை 4.30 மணிக்கு நான்காம் கால யாக வேள்வி நடந்தது. காலை 6 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடந்தது. இதைத்தொடர்ந்து, விநாயகர் ஸ்தூபி, அழகு நாச்சியம்மன் ஸ்தூபி, ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஅழகுநாச்சியம்மன் பரிவாரங்களுக்கு மகா கும்பாபிசேகம் நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.மாலை 5 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது.

Related Stories: