விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

குன்னூர்,ஜூன்25: குன்னூர் ஹவுசிங் யூனிட் பகுதியில் விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மகா கும்பாபிஷேக நிகழ்ச்சி நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த 22ம் தேதி மாலையில் ஆச்சாரியவர்ணம், புண்ணியாகம் உள்ளிட்டவை நடைபெற்றது. 23ம் காலையில் மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கலச பூஜை நடைபெற்றது. மாலையில் பிரசாதம் வழங்கப்பட்டது.

நேற்று அதிகாலையில் மகாகணபதி ஹோமத்துடன் பூஜை துவங்கி நடைபெற்றது. காலை 7 மணி முதல் 7.30 பாலக்காடு பிரம்ம ஸ்ரீ நாத சர்மா நம்பூதிரி தலையில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு,சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.பகல் 12.10 மணியளவில் மகா கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குன்னூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: