ஈரோட்டில் அற்புத சாகசங்கள் நிறைந்த தி கிரேட் இந்தியன் சர்க்கஸ்

ஈரோடு, ஜூன் 25:  ஈரோடு, மரப்பாலம், பேபி மருத்துவமனை பின்புறம் உள்ள மஹாஜனா பள்ளி விளையாட்டு மைதானத்தில் அற்புத சாகசங்கள் நிறைந்த தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் நடைபெற்று வருகிறது. இந்த சர்க்கஸில் ரஷ்யா, சீனா, ஆப்பிரிக்கா நாடுகளில் பயிற்சி பெற்ற 100-க்கும் மேற்பட்ட சர்க்கஸ் கலைஞர்கள் பல்வேறு சாகசங்களை நிகழ்த்துகின்றனர். குறிப்பாக அந்தரத்தில் பறக்கும் ரஷ்யன் அக்ரோபெட், 60அடி உயரத்தில் அழகிய மங்கை நடனமாடும் ரஷ்யன் ரிங் பேலன்ஸ், சர்க்கஸ் மங்கைகள் கயிறை கொண்டு சாகசம் புரியும் ரஷ்யன் லே சோ, மரண வளையத்தில் கலைஞர்கள் செய்யும் சாகசம்,எவ்வித வலையும் விரிக்காமல் உயிரை துச்சமாக நினைத்து சர்க்கஸ் அழகி அந்தரத்தில் தலைகீழாக நடக்கும் ஸ்கைவாக், பிடிமானமின்றி அந்தரத்தல் தொங்கும் பேலன்சிங் டிரிபிஸ், சர்க்கஸ் அழகி குதிரையின் மீது அமர்ந்து கொண்டு பல்வேறு சாகசங்களை நிகழ்த்தும் ஹார்ஸ் ரைடிங், பயர் டான்ஸ் ஆகிய நிகழ்ச்சிகள் கண்கொள்ளாக் காட்சியாக திகழ்கிறது.

முதல் முறையாக மரண கூண்டுக்குள் 2 நபர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டும் நிகழ்ச்சி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. கால்களில் முன்னும், பின்னும் வேகமாக நடக்கும் நாய்கள்,  ஓட்டகத்தின் அணிவகுப்பு என விலங்குகள் சாகசங்கள், சிறுவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. 9 சர்க்கஸ் கலைஞர்கள் நிகழ்த்தும் ஸ்டிக் ஜக்கஜளிங், நைப் பேலன்ஸ், சோ பேலன்ஸ்,  போன்ற சாகசங்கள் இதுவரை எந்த ஒரு சர்க்கஸிலும் இல்லாத மேல்பார் ஊஞ்சல்  விளையாட்டு என சர்க்கஸ் காட்சிகள் அமைந்துள்ளன.

ஈரோடு மாநகரில் 4 ஆண்டுக்கு பிறகு இப்பொழுது முற்றிலும் மாற்றப்பட்ட புத்தம் புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி உள்ளனர்.   மதியம் 1 மணி, மாலை 4மணி, இரவு 7மணி என மூன்று காட்சிகளாக நடைபெறுகிறது.  சிறப்பு சலுகை கட்டணத்தில் சர்க்கஸ் காட்சியை காண விரும்பும் கல்வி நிறுவனங்கள் 9894354763 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவல்களை தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் மேலாளர்கள் கே.வில்சன் மற்றும் ஏ.எம்.எஸ்.நாசர் தெரிவித்தனர்.

Related Stories: