8வது வார்டு உறுப்பினர் இடைத்தேர்தல்: திமுக சார்பில் முகமது இப்ராஹிம் சுல்தானா வேட்பு மனு தாக்கல்

தஞ்சாவூர், ஜூன் 25: தஞ்சாவூர் மாநகராட்சி 8 வது வார்டு உறுப்பினர் வார்டு இடைத்தேர்தலில் திமுக சார்பில் முகமது இப்ராஹிம் சுல்தானா வேட்பு மனு தாக்கல் செய்தார். தஞ்சாவூர் மாநகராட்சி 8வது வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுல்தான் ஜெய்லானி சமீபத்தில் திடீரென அகாலமரணம் அடைந்தார். இதை ஒட்டி மாநகராட்சி 8வது வார்டுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று திமுக சார்பில் மறைந்த சுல்தான் ஜெய்லானி மகன் முகமது இப்ராகிம் சுல்தானா தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலை,

கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெகதீசன் இடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.அப்போது எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி நீலமேகம், மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மாவட்ட பொருளாளர் எல்ஜி அண்ணா, கமலா ரவி ஆகியோர் உடன் சென்றனர்

Related Stories: