பாபநாசம் அரசு பெண்கள் பள்ளியில் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு நீதிபதி பாராட்டு

பாபநாசம், ஜூன்25: பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாபநாசம் நீதித்துறை நடுவர் அப்துல்கனி ஊக்கத்தொகை மற்றும் திருக்குறள் புத்தகங்களை வழங்கி பாராட்டி பேசினார். பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 7 மாணவ மாணவிகளுக்கு, ஊக்கத்தொகை வழங்கும் விழா நடந்தது. அனைவரையும் பள்ளி தலைமையாசிரியர் நீலாதேவி வரவேற்றார்.

அரசு வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனார். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பாபநாசம் நீதித்துறை நடுவர் அப்துல் கனி கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை, திருக்குறள் புத்தகத்தை வழங்கியும் பாராட்டி பேசினர். நிகழ்ச்சியில் உதவி தலைமையாசிரியர் விஜய்,சிவாஜி மற்றும் பெற்றோர்கள்,மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: