அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி அணிவித்தனர் சுகாதாரத்துறை சார்பில் இருமல், சளி குறித்த கணக்கெடுப்பு

பொன்னமராவதி, ஜூன் 25: பொன்னமராவதி அருகே கருப்புக்குடிப்பட்டியில் சுகாதாரத்துறையினர் சார்பில் இருமல் சளி குறித்த கணக்கெடுப்பு நடைபெற்றது.

பொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரி ஆரம்ப சுகாதார நிலையத்தின் பகுதியான கருப்புக்குடியில் சீனியர் ட்ரீட்மெண்ட் சூப்ரவைசர் பவுன்ராஜ், சுகாதார ஆய்வாளர்கள் உத்தமன், பிரேம்குமார் மற்றும் பகுதி செவிலியர்கள் வாசுகி, வெண்ணிலா, மகாலெட்சுமி ஆகியோர் உள்ளிட்ட குழுவினர்கள் வீடு வீடாக சென்று இருமல்சளி குறித்த கணக்கெடுப்பை 380 நபர்களிடம் மேற்கொண்டனர். சளி மாதிரி எடுக்கப்பட்டது. சளி பரிசோதனையில் காசநோய் உறுதி செய்யப்பட்டால் இல்லம் தேடிமருந்து மாத்திரைகள் நேரடியாக வழங்கப்படும். என விளக்கமளித்தனர்.

Related Stories: