×

அரியலூரில் இன்று நடக்கிறது திமுக 15வது ஒன்றிய தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்

ஜெயங்கொண்டம், ஜூன்25: அரியலூர் மாவட்டத்தில் திமுகவின் 15வது ஒன்றிய கழக தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று மாலை அரியலூரில் புறவழிச்சாலையில் உள்ள ஒரு மஹாலில் நடைபெற உள்ளது. இதுகுறித்து அரியலூர் மாவட்ட செயலாளரும் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சருமான எஸ் எஸ் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது-திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15வது ஒன்றிய கழக தேர்தலுக்கான வேட்பு மனுக்களை இன்று மாலை 5 மணி அளவில் அரியலூர் புறவழிச் சாலையில் உள்ள ரிதன்யா மஹாலில் பெறப்படுகிறது. மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச்செயலாளரும் தலைமைகழக பிரதிநிதியுமான எம்எல்ஏ கிருஷ்ணசாமி வேட்பு மனுக்களை பெற்றுக் கொள்வார் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக அளவில் வெங்காயம் சேமிக்க நடவடிக்கை
பெரம்பலூர், ஜூன் 25: பெரம்பலுார் மாவட்டத்தில் நடப் பாண்டு அதிகஅளவிலான வெங்காய சேமிப்பு அமை ப்புகள் அமைக்க நடவடிக் கை எடுக்கப்படும் என விவசா யிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக் டர் வெங்கடபிரியா கூறினார். பெரம்பலுார் மாவட்ட விவ சாயிகள் குறைதீர்க்கும் நா ள் கூட்டம் பெரம்பலூர் மா வட்ட கலெக்டர்அலுவலகக் கூட்டஅரங்கில் நேற்று நடை பெற்றது. மாவட்டவருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, வேளாண்மை இணை இயக்குநர் கருணாநிதி, கூட்டுறவுத்துறை மண்டல இ ணைப்பதிவாளர் பாலமுரு கன், தோட்டக்கலை துறை துணை இயக்குநர் இந்திரா, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் சுரேஷ் கிறிஸ்டோபர் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வே) பூவலிங்கம் வரவேற்றார்.

பெரம்பலூர் மாவட்ட கலெ க்டர்  வெங்கடபிரியா த லைமை வகித்தார். கூட்டத்தில் கலந்துகொண் ட விவசாயிகள் பெரம்பலூ ர் மாவட்டம் சின்னவெங்கா ய உற்பத்தியில்தமிழகஅள வில் முதலிடத்தில் உள்ள தால் வெங்காயக் கொட்ட கை அமைக்கும் திட்டத்தில் நடப்பாண்டு கூடுதல் கொ ட்டகைகள் அமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு பயிர்க்க டன் முகாம் நடத்திட வேண் டும். சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு வழங்கப்ப ட்ட நிலத்தை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்க வேண் டும். அரசு மற்றும் தனியார் சர்க்கரை ஆலையில் நிலு வையிலுள்ள தொகையை பெற்றுத்தரவேண்டும் என கோரிக்கை விடுத்துப்பேசி னர்.

பின்னர் ஒரு லட்சம் இலவச மின்இணைப்பு வழங் கும் திட்டத்தை வழங்கி பெ ரம்பலுார்மாவட்டத்தில் இல க்கை காட்டிலும் கூடுதலா ன விவசாயிகளுக்கு மின் இணைப்புவழங்கிய தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலி னுக்கும், துரிதமாக நடவடி க்கை எடுத்த மின்சாரத்து றை அலவலர்களுக்கும் வி வசாய சங்கப் பிரநிதிகள் நன்றிதெரிவித்தனர். மேலு ம் பெரம்பலுார் மாவட்டத் தில் வரத்துவாய்க்கால்க ளை துார்வாருதல்,கால்ந டைகளுக்கான திட்டங்கள், நெல் கொள்முதல் செய்தல் போன்ற விவசாயிகளின் நலன் சார்ந்த திட்டங்களை துரிதமாக செயல்படுத்தும் மாவட்டகலெக்டருக்கு விவ சாயிகள் தங்களது நன்றிக ளை தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து மாவ ட்டக் கலெக்டர் பேசியதாவ து : பெரம்பலூர் மாவட்டத் தில் விவசாயிகள் பயன்பா ட்டிற்காக நெல் 46.27 மெட் ரிக் டன்கள் இருப்பில் உள் ளது. சிறுதானியங்களில் 3.26 மெ.டன்கள் இருப்பில் உள்ளது பயறுவகைகளில் 1.751 மெ.டன்கள் இருப்பில் உள்ளது. எண்ணெய்வித்து பயிர்களில் 10.52 மெ.டன் கள், உரங்கள்கூட்டுறவு சங் கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் தேவையா னஅளவு இருப்பு வைக்கப் பட்டுள்ளது. தோட்டக்கலை துறை மூலமாக குறைந்த செலவிலான வெங்காய சேமிப்பு அமைப்பு, சிப்பம் கட்டும் அறை, தேனீ வளர் ப்பு,

இயந்திரமயமாக்குதல் போன்ற பணிகளும், தமிழ் நாடு நீர்பாசன வேளாண் நவீனமயமாக்கல் திட்டத்தி ல் பராம்பரியத்திலிருந்து தோட்டக்கலை பயிர்களுக் கு பல்வகைப்படுத்தும் இன த்தில் மிளகாய், சொட்டுநீர் பாசனம்அமைக்க உத்தரவி டப்பட்டுள்ளது. நடப்பாண் டில் பெரம்பலுார் மாவட்டத் தில் அதிகஅளவிலான வெ ங்காய சேமிப்பு அமைப்பை ஏற்படுத்த துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். கூட்டத்தில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் மாவட்டஅளவிலான அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,15th Union elections ,Ariyalur ,
× RELATED ஸ்டாலினின் தேர்தல் வியூகம் மோடியை நடுங்க வைத்துள்ளது; திருமாவளவன் பேச்சு