தா.பழூர் மகா முத்துமாரியம்மன் கோயில் திருவிழா

தா.பழூர், ஜூன் 25:அரியலூர் மாவட்டம் தாபழூரில் பிரசித்தி பெற்ற  மகா முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 22-ம் தேதி தொடங்கியது.இதில் உலக நன்மை வேண்டி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு வேள்வி பூஜை நடைபெற்று, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு பால்குடம் மற்றும் அலகு காவடி, பூங்கரகம் எடுத்தனர். பக்தர்கள் அனைவரும் ராஜவீதி வழியாக முக்கிய வீதிகளில் வலம் வந்து ஊர்வலம் வந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று சுவாமி வீதியுலா மற்றும் அன்னதானம் நடைபெற்றது. பக்தி சிரத்தையுடன் நடைபெற்ற இந்த விழாவில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: