நாகை மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு

நாகை,ஜூன்25: நாகை மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார். நாகை மாவட்டத்தில் நாகை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முட்டம் ஊராட்சியில் உள்ள தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளியில் நீர் உறுஞ்சும் குழி அமைக்கும் பணிகளையும், பாலையூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பில் மயான திடலில் மரகன்றுகள் உற்பத்தி செய்யும் பணிகளையும், தேமங்கலம் ஊராட்சியில் ஊறுஞ்சும் குழி அமைக்கும் பணி, சிக்கல் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டுமன பணி நடைபெறுவதையும் ரூ.30 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலைய கட்டிடம் கட்டுமானப் பணிகளையும் கலெக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டார். ரூ.2.87 லட்சம் மதிப்பில் சங்க நதி குளம் அமைக்கும் பணி, ஒரத்தூர் ஊராட்சியில் ரூ.4.5 லட்சம் மதிப்பில் அம்ரூத் சர்வர் திட்டத்தின் கீழ் குளம் அமைக்கும் பணி ஆகியவற்றை கலெக்டர் ஆய்வு செய்தார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் கீழையூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலக்குறிச்சி ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நீர் உறிஞ்சு குழி அமைக்கும் பணி, ரூ.7.64 லட்சம் மதிப்பில் ஓட்டதட்டை ரெட்டைகுளம் புனரமைப்பு செய்தல் பணி, கருங்கண்ணி ஊரட்சியில் குளம் அமைக்கும் பணி, பிரதம மாந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுமன பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பில் நர்சரி கார்டன் அமைக்கும் பணி ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் நாலுவேதபதி ஊரட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.10.லட்சம் மதிப்பில் நர்சரி கார்டன் அமைக்கும் பணி மற்றும் ரூ.2.லட்சம் மதிப்பில் சமுதய பண்ணை குட்டை அமைக்கும் பணி ஆகியவற்றை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார். திட்ட இயக்குநர் பெரியசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: