நகராட்சியை பசுமையாக மாற்ற புகளூர் பெண்கள் பள்ளியில் மாணவிகள் விழிப்புணர்வு உறுதிமொழி

வேலாயுதம்பாளையம், ஜூன் 25: கரூர் மாவட்டம் புகளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புகளூர் நகராட்சியை பசுமையான நகராட்சியாக்குதல் குறித்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் நகராட்சித் தலைவர் ஏ. குணசேகரன் தலைமையில் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவிகள் கலந்துகொண்டு புகழூர் நகராட்சியை பசுமையான, தூய்மையான நகராட்சியாக மாற்றும் வகையில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து தர வேண்டும் எனவும், நகராட்சியை தூய்மையான நகராட்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும், தேவையற்ற வகையில் குப்பைகளை கண்ட இடங்களில் போடக்கூடாது எனவும் அனைவரும் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் நகராட்சி துணைத்தலைவர் பிரதாபன் தலைமை ஆசிரியை, ஆசிரியைகள், மற்றும் நகராட்சி துப்புரவு மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: