வரிப்பிலான்குளத்தில் பயணியர் நிழற்குடை: ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்

சாத்தான்குளம், ஜூன் 25:  வரிப்பிலான்குளத்தில் பயணியர் நிழற்குடை கட்ட ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார். சாத்தான்குளம் யூனியன் கொம்பன்குளம் பஞ்சாயத்திற்குட்பட்ட வரிப்பிலான்குளத்தில், பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணியர் நிழற்குடை கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. யூனியன் சேர்மன் ஜெயபதி தலைமை வகித்தார். ஒன்றிய ஆணையாளர் ராணி, வடக்கு வட்டார காங். தலைவர் பார்த்தசாரதி, சாலை பாதுகாப்பு நுகர்வோர் குழு உறுப்பினர் போனிபாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிடிஓ ராஜேஷ்குமார் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ கலந்து கொண்டு புதிய நிழற்குடை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

இதில் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் பொன்முருகேசன், மாவட்ட காங். துணை தலைவர் சங்கர், பொருளாளர் எடிசன், தொகுதி இளைஞர் காங். தலைவர் பிளஸ்வின்,  ஒன்றிய கவுன்சிலர் குருசாமி, பேரூராட்சி கவுன்சிலர் லிங்கபாண்டி, வட்டார இளைஞர் காங். துணை தலைவர் பாஸ்கர், மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்க மாநில அமைப்பாளர் இசக்கிமுத்து, கொம்பன்குளம் திமுக கிளை செயலாளர் மணிகண்டன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: