×

நாகர்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் வினியோகம்

நெல்லை, ஜூன் 25: நாகர்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரியில் சுகாதார ஆய்வாளர் மற்றும் கிராம சுகாதார செவிலியர் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் வினியோகம் கல்லூரி துணைத்தலைவர் டாக்டர் அருள்ஜோதி தலைமையில் கல்லூரி டீன் டாக்டர் குகானந்தம், கண்காணிப்பாளர் டாக்டர் அருணாச்சலம் முன்னிலையில் நடந்தது. ரோஜாவனம் பாராமெடிக்கல் சுகாதார ஆய்வாளர் கல்லூரி முதல்வர் டாக்டர். லியாகத்அலி வரவேற்றார். செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் புனிதா டேனியல், மாணவர் சேர்க்கை குறித்து அறிமுக உரையாற்றினார்.

ரோஜாவனம் கல்லூரி குறித்து துணைத்தலைவர் டாக்டர் அருள்ஜோதி பேசுகையில், ‘‘மேல்நிலை வகுப்பில் கணிதம், அறிவியல் அல்லது அறிவியல் பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற ஆண்கள் சுகாதார ஆய்வாளர் படிப்பில் சேர தகுதியுடையவர்கள். மேல்நிலை வகுப்பில் எந்த பிரிவிலும் தேர்ச்சி பெற்ற மாணவிகள் கிராம சுகாதார செவிலியர் படிப்பில் சேர தகுதியானவர்கள். சிறந்த நிர்வாகம், அனுபவமிக்க பேராசிரியர்கள், ஆய்வகங்கள், தங்கும் விடுதி, கேன்டீன் மற்றம் பஸ் வசதிகளுடன் மாணவர்களுக்கு செய்முறை பயிற்சிகள் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நகராட்சி, மாநகராட்சி,

அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரிகளில் நேரடியாக அழைத்துச் சென்று பயிற்சி கொடுத்து வருகிறோம். மாணவர்களின் திறமையை வளர்ப்பதற்கு பல்வேறு சமுதாய பணிகளில் ஈடுபடுத்தி வருகிறோம். இளைஞர் ரெட்கிராஸ், ரோவர் சாரணர் இயக்கம், இயற்கை நண்பர்கள் அமைப்பு, பேரிடர் மேலாண்மை குழு, தமிழ், ஆங்கில புலமை சங்கம் உள்ளிட்ட சங்கங்களை ஏற்படுத்தி மாணவர்களின் திறமைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. மேலும் உடனடி வேலைவாய்ப்பை பெற்று தரும் ஒரு வருட படிப்புகளான டிப்ளமோ இன் கியூமன் கேர், டிப்ளமோ படிப்புகளான யோகா, பயர் அன்ட் சேப்டி மேனேஜ்மென்ட், லேப் டெக்னாலஜி ஆகிய படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது.

மேல்நிலை வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஆண்கள், பெண்கள் சேர்ந்து படித்து பயன்பெறலாம்.’’ என்றார். நிகழ்ச்சியில் கல்லூரி திட்ட ஆலோசகர் சாந்தி, திட்ட மேலாளர் சில்வெஸ்டர், ஆவண அலுவலர் ஜியோ பிரகாஷ், மேலாளர்கள் கோபி, நிதி மேலாளர் சேது மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவக்குழுவினர் பங்கேற்றனர்.

Tags : Rojavanam Paramedical College ,Nagercoil ,
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு