×

வயநாட்டில் ராகுல் காந்தியின் அலுவலகம் சூறை

வயநாடு, ஜூன்  25: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு எதிராக, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவான எஸ்.எப்.ஐ., நடத்திய கண்டன  ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் வயநாட்டில் உள்ள எம்பி அலுவலகத்தை  அடித்து நொறுக்கி சூறையாடினர். அனைத்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்களைச் சுற்றி ஒரு கிலோமீட்டருக்கு சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தை கட்டாயமாக்குவது தொடர்பாக சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதானால் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில் உள்ள ஒரு கிலோமீட்டரில் ஆட்கள் வசிப்பது பற்றி ஆய்வு செய்ய கேரள வனத்துறை குழு ஒன்றை அமைத்துள்ளது. இதனால் மலை மாவட்டமாக உள்ள வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி எம்பியாக இருந்தாலும் இதுபற்றி அவர் எதுவும் பேசவில்லை என கூறப்படுகிறது.

இதனை கண்டித்து ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவான எஸ்.எப்.ஐ. 80-100 பேர் கலந்து கொண்ட கண்டன  ஊர்வலம் நடத்தியது. அப்போது, அதில் பங்கேற்றவர்கள் ராகுல் காந்தியின் எம்பி அலுவலகத்தின் மீது அவர்கள் தாக்குதல் நடத்தி அடித்து நொறுக்கினர். இந்த விவகாரத்தில் 8 பேரை கைது செய்து போலீஸ் அவர்களை காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கேரளா மாநில காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அம்மாநில முதல்வர் பினராய் விஜயனும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதோடு, தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

Tags : Rahul Gandhi ,Wayanad ,
× RELATED சொல்லிட்டாங்க…