சென்னை காவல் துறையில் 154 வாகனங்கள் 30ம் தேதி ஏலம்

சென்னை: சென்னை மாநகர காவல் துறையில் பயன்படுத்தி கழிவு செய்யப்பட்ட 80 பைக்குகள் உள்பட 154 வாகனங்கள்  வரும் 30ம் தேதி ஏலம் விடப்படுகிறது. இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகர காவலில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்ப்பட்ட 74 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 80 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 154 வாகனங்கள் வரும் 30ம் தேதி எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் காலை 10 மணிக்கு ஏலம் விடப்படுகிறது.

இந்த ஏலத்திற்கான முன்பதிவு வரும் 29ம் தேதி காலை 10 மணி முதல் 2 மணி வரை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடக்கிறது. அடையான அட்டை மற்றும் ஜிஎஸ்டி பதிவெண் சான்றுடன் வரும் ஏலதாரர்கள் மட்டுமே முன்பதிவு கட்டணம் செலுத்த அனுமதிக்கப்படுவர்.

முன்பணம் செலுத்தி பதிவு செய்த நபர்கள் வரும் 30ம் தேதி ஏலக்குழுவினர் முன்னிலையில் ஏலத்தில் பங்கேற்கலாம். ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களுக்கான ஏலத்தொகை மற்றும் ஜிஎஸ்டி தொகையை மறுநாள் முழுவதுமாக செலுத்த வேண்டும்.

Related Stories: