திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் இல்லத் திருமண விழா

நெய்வேலி, ஜூன் 14:  குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன் - புகழேந்தி, அண்ணையம்மாள் தம்பதியரின் மகன் மணி (எ) மணிகண்டனுக்கும், பண்ருட்டி மேல்மாம்பட்டு பண்டரிநாதன்- ராஜகுமாரி, தனலட்சுமி தம்பதியரின் மகள் பிரியங்காவுக்கும் நேற்று வெங்கடாம்பேட்டை கே.வி மஹாலில் திருமண விழா நடைபெற்றது. தமிழக தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் தலைமை தாங்கினார். தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் வரவேற்றார். அரியலூர் மாவட்ட செயலாளரும் போக்குவரத்து துறை அமைச்சர் சி.சிவசங்கர் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.

இந்நிகழ்வில் பண்ருட்டி சேர்மன் சபா.பாலமுருகன், தவாக நிர்வாக குழு உறுப்பினர் திருமால்வளவன், திமுக அவைத் தலைவர் ராஜா, பொதுக்குழு உறுப்பினர் தண்டபாணி, மேற்கு மாவட்ட துணை செயலாளர் தணிகைசெல்வன், நெய்வேலி நகர செயலாளர் பக்கிரிசாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் ஜெகநாதன், மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கருப்பு சாமி, துணை அமைப்பாளர் ராஜேஷ், நகர இளைஞரணி அமைப்பாளர் ஸ்டாலின், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் பாக்கியராஜ், இளங்கேஸ்வரன், மேற்கு ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர் ராஜசேகர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், டாக்டர்கள், வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள், என்எல்சி தொமுச நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். விழாவிற்கு வருகை தந்தவர்களை குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் குணசேகரன், அவரது மகன் சூரியகுமார் மற்றும்  குடும்பத்தினர்கள் வரவேற்றனர்.

Related Stories: