களங்காணி கிராமத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இளம் கதை சொல்லி விருது

சேந்தமங்கலம், ஜூன் 14: புதுச்சத்திரம் ஒன்றியம், களங்காணி கிராமத்தில், கோடை விடுமுறையையொட்டி 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, வீதி வகுப்பறை வழியாக மாரியம்மன் கோயிலில், அரசு பள்ளி ஆசிரியை லதா அண்ணாதுரை நடத்தினார். அதில் மாணவர்களுக்கு கற்றலில் ஆர்வத்தை தூண்ட, சிறார் எழுத்தாளர்களின் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து, மாணவர்களுக்கு கனிந்த இதயங்கள் அமைப்பும், பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கமும் இணைந்து, இளம் கதைசொல்லி விருது வழங்கும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் நடந்தது. இதில் நாமக்கல் கவிஞர் சிந்தனை பேரவையின் தலைவர் மோகன், விருதுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கல்வி பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் விடியல் சேகர், சரிதா, சரவணன், ராமமோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: