பொன்மலை பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

கிருஷ்ணகிரி, ஜூன் 14: கிருஷ்ணகிரி பொன்மலை சீனிவாச பெருமாள் கோயிலில் தேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது. கிருஷ்ணகிரி பொன்மலை சீனிவாச பெருமாள் கோயிலில், தேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் நேற்று நடந்தது. இதையொட்டி கடந்த 10ம் தேதி காலை, சுமங்கலி மஞ்சள் இடிக்கும் நிகழ்ச்சியும், பந்தல் கால் நடும் நிகழ்ச்சியும் நடந்தது. 12ம் தேதி இரவு ஸ்தல சுத்தி, புண்ணியாகவாசனம், கோ பூஜை, வாஸ்து சாந்தி ஹோமம், உதகசாந்தி பூஜை ஆகியவை நடந்தது. நேற்று காலை உற்சவருக்கு அபிஷேகமும், திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது. காலை 9 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம், மதியம் 12.30 மணிக்கு திருக்கல்யாண விருந்து, மாலை 4 மணிக்கு ஊஞ்சல் சேவை, மாலை 6 மணிக்கு தாயார் சமேத சுவாமி கோயில் திருச்சுற்று பல்லக்கு சேவை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: